இந்தியாவிற்கு நோ! சீனாவிற்கு எஸ் சொன்ன ஈரான்! புதிய சிக்கல்!

29 July 2020 அரசியல்
iran.jpg

இந்தியாவிற்கு வழங்கிய சாப்கர் இரயில் ப்ராஜெக்ட்டினை, ஈரான் அரசு ரத்து செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானிற்கும், ஈரானிற்கும் இடையில் புதிதாக 680கிமீ நீளமுடைய இரயில்வேத் திட்டத்தினை நிறைவேற்றித் தர, இந்தியா அரசு ஈரானுடன் ஒப்பந்தம் செய்தது. கடந்த 2016ம் ஆண்டு, இந்த ஒப்பதம் கையெழுத்தானது. ஆனால், தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இரயில்வேப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்திய இரயில்வேக்கு சொந்தமான, இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில் இந்தத் திட்டம் ஒப்பந்தமானது. இருப்பினும், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடைபெறும் பிரச்சனைக் காரணமாக, இந்தத் திட்டத்தில் இந்தியா மெத்தனம் காட்டி வந்தது. மேலும், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய அரசு குறைத்துக் கொண்டது.

இதனால், இந்தியாவிற்கும் ஈரானிற்கும் இடையிலான உறவில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டன. அமெரிக்காவும் இந்தியாவும் மிக நெருக்கமாக உள்ளதால், இந்தத் திட்டத்தினை ஈரான் அரசு நிறுத்தி உள்ளது. இதனால், இந்தியாவிற்கு பண இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சாப்கர் திட்டம் கிடைத்திருந்தால், பண வருவாய் கிடைத்திருக்கும்.

ஆனால், இந்த சூழ்நிலைகளுக்குப் பின்னாலும் சீனா இருப்பதாக தெரிகின்றது. காரணம், இந்தியாவுடனான ஒப்பந்தத்தினை முறித்துக் கொண்ட ஈரான், தற்பொழுது சீனாவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த சாப்கர் ரயில் திட்டத்துடன் அங்குள்ள துறைமுகத்தினை மேம்படுத்தும் முயற்சியில், சீனாவுடன் 400 பில்லியன் டாலர் அளவிற்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த ஒப்பந்தங்களால், பாகிஸ்தானிற்கு 72 கிலோ மீட்டர் தூரத்தில் சாப்கர் துறைமுகமானது, அடுத்தக்கட்ட வடிவமைபிற்கு உள்ளாக உள்ளது. ஈரான் உதவியினைப் பெறுவதால், சீனாவின் கை பாகிஸ்தான் வழியாக ஓங்கி உள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு, சீனாவிற்கு மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்கவும், ஈரான் அரசு சீனாவுடன் புதிய ஒப்பந்தத்தினையும் செய்துள்ளது.

HOT NEWS