ரயில்களுக்கான அட்டவணை வெளியானது! டிக்கெட் புக்கிங் தேதி அறிவிப்பு!

21 May 2020 அரசியல்
irctcrails.jpg

இந்தியா முழுவதும் 200 ரயில்களை இயக்குவதற்கான, கால அட்டவணையை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. புலம் பெயரும் தொழிலாளர்கள் இதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல லட்சம் பேர், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே, தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

இதனை முன்னிட்டு, 15 சிறப்பு ரயில்கள் டெல்லியில் இருந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு இந்திய ரயில்வே இயக்கியது. இந்நிலையில், தற்பொழுது 200 ரயில்களை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் ஜூன் ஒன்றாம் தேதி முதல் இயங்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங்கானது, மே 21ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதனை ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ரயில்களில் ஒன்று கூட, தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. இந்த ரயில்களுக்கான அட்டவணையும் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள், இந்த ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில்கள், ஏசி இல்லாமல் இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்பொழுது இந்த ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங்கானது, வரும் 22ம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.

HOT NEWS