மே-12 முதல் ரயில்களுக்கு அனுமதி! மத்திய அரசு அறிவிப்பு!

11 May 2020 அரசியல்
irctcrails.jpg

நாளை முதல் ரயில்கள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் வருகின்ற மே-17ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் வேலைக்கு சென்ற மக்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

அவர்களை மீண்டும், அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், பொதுமக்கள் தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்கே கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனை மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக கவனித்து வருகின்றன. இதற்கிடையே, நேற்று இந்திய இரயில்வே அமைச்சகம், அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.

அதில், வருகின்ற மே-12ம் தேதி முதல் இந்திய ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங்கானது, இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. மொத்தம் 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக, இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவையினைத் தொடர்ந்து, பிற ரயில்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயக்கப்பட உள்ளன.

நாளை ஹவ்ராவில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து ஹவ்ராவிற்கும் இயக்கப்பட உள்ளன. ராஜேந்திர நகர் முதல் டெல்லிக்கும், பின்னர் டெல்லியில் இருந்து ராஜேந்திர நகருக்கும் இயக்கப்பட்ட உள்ளன. திப்ரூஹார்க் முதல் டெல்லி, டெல்லி முதல் திப்ரூஹார்க், டெல்லி முதல் ஜம்மூ டாவி, ஜம்மூ டாவி முதல் டெல்லி, பெங்களூரு முதல் டெல்லி, டெல்லி முதல் பெங்களூரு, திருவனந்தபுரம் முதல் டெல்லி, டெல்லி முதல் திருவனந்தபுரம், சென்னை சென்ட்ரல் முதல் டெல்லி, டெல்லி முதல் சென்னை சென்ட்ரல், பிலாஸ்பூர் முதல் டெல்லி, டெல்லி முதல் பிலாஸ்பூர், ராஞ்சி முதல் டெல்லி, டெல்லி முதல் ராஞ்சி, மும்பை சென்ட்ரல் முதல் டெல்லி, டெல்லி முதல் மும்பை சென்ட்ரல்.

அஹ்மதாபாத் முதல் டெல்லி, டெல்லி முதல் அஹ்மதாபாத், அகர்டலா முதல் டெல்லி, டெல்லி முதல் அகர்டலா, புவனேஸ்வர் முதல் டெல்லி, டெல்லி முதல் புவனேஸ்வர், டெல்லி முதல் மட்காவுன், மட்காவுன் முதல் டெல்லி, செகந்திராபாத் முதல் டெல்லி மற்றும் டெல்லி முதல் செகந்திராபாத்திற்கு இயக்கப்பட உள்ளன.

HOT NEWS