டிக்கெட்டிற்காக குவிந்த இந்தியர்கள்! ஐஆர்சிடிசி வலைதளம் காலி!

11 May 2020 அரசியல்
irctcwebsite.jpg

இந்தியா முழுவதும் நாளை முதல், 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் புக்கிங்கானது, இன்று மாலை 4 மணி முதல் கொடுக்கப்பட்டன.

இந்தியா முழுவதும், கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனைத் தடுக்கும் பொருட்டு, ரயில்கள், விமானங்கள் மற்றும் பேருந்து சேவை உள்ளிட்டவை தடை செய்யப்பட்டன.

இதனால், வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற பல லட்சம் பேர், கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் கிலோ மீட்டர்கள், நடந்தே சென்று, தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்ல சிறப்பு இரயில்களை மத்திய அரசு இயக்கியது. இந்நிலையில், தற்பொழுது டெல்லி முதல் 15 சிறப்பு ரயில்களை வரும், மே-12ம் தேதி முதல் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதற்கான டிக்கெட் முன்பதிவானது, இன்று மாலை நான்கு மணி முதல் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவித்தது. அவ்வாறு அறிவித்தப்படியே, ஐஆர்சிடிசி வலைதளத்தில் டிக்கெட் புக்கிங் தொடங்கியது. இருப்பினும், ஐஆர்சிடிசி வலைதளம் செயல்படவில்லை. தொடர்ந்து லட்சக்கணக்கானோர் அந்த வலைதளத்திற்குள் நுழைந்ததால், டிக்கெட் புக்கிங் ஆரம்பிப்பதற்கு முன்பே, அதன் சர்வர் லோட்டாகி விட்டது.

இதனை அடுத்து, அந்த வலைதளம் செயல்பட முடியாமல் க்ராஷானது. இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இந்திய இரயில்வே, இதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் விரைவில் அனைத்தும் சரியாகிவிடும் எனவும் கூறியுள்ளது.

இந்நிலையில், டிக்கெட் புக்கிங்கானது, மாலை ஆறு மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆறு மணி முதல், ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங் அனுமதிக்கப்பட்டது.

HOT NEWS