விக்ரம் படத்தில் இர்பான் பதான்!

15 October 2019 சினிமா
irfanpathan.jpg

நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தில், பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்க உள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கும் சியான்58 படத்தில், நடிகர் விக்ரம் நடித்து வருகின்றார். இந்நிலையில், படத்தில் நடிப்பதற்கான மற்றக் கதாப்பாத்திரங்களுக்கான, தேடுதல் நடைபெற்று வருகின்றது. அதில், பிரபல முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான, இர்பான் பதான் நடிக்க உள்ளார் என்றத் தகவல் பரவியது.

இந்நிலையில், இப்படத்தில் தான் நடிக்க உள்ளதை, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உறுதி செய்துள்ளார். அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம். நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏஆர்ரகுமான் மற்றும் இயக்குநர் அஜய்ஞானமுத்து உடன் சியான்58 இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவு தொடரட்டும். நன்றி! மஜா பன்றோம்… என டிவீட் செய்துள்ளார்.

இந்தத் திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

HOT NEWS