பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து? அமைச்சர் பதில்!

09 April 2020 அரசியல்
sengottaiyan8th.jpg

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வானது ரத்து செய்யப்படுமா என்றக் கேள்விக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், நடைபெற இருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வானது மறுத்தேதி குறிப்பிடப்படாமல், ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேர்வானது, எப்பொழுது மீண்டும் நடைபெறும் என்றக் கேள்வி எழுந்துள்ளது.

இந்தத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், இந்த தேர்வினை ரத்து செய்யும் முடிவினை, தமிழக முதல்வரே எடுக்க வேண்டும். இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது நடத்தப்படுமா என்றக் கேள்வியும் எழுந்துள்ளது.

HOT NEWS