கொரோனா வைரஸ் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பாதிக்குமா? பகீர் பதில்!

14 February 2020 அரசியல்
pregnantbumb.jpg

கொரோனா வைரஸானது, தற்பொழுது உலகினையே அச்சுறுத்தும் விஷயமாக மாறியுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல், சீன அரசாங்கம் திணறி வருகின்றது. இந்நிலையில், சீனாவில் மட்டும் தற்பொழுது 1500க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து உள்ளனர். 65,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களாக, அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்த வைரஸ் பற்றி, விஞ்ஞானிகள் தற்பொழுது அதிவேக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வைரஸிற்கு covid-19 என்றப் பெயரினை வைத்துள்ளது சர்வதேச சுகாதார அமைப்பு. இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், தாய்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சீன மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒன்பது கர்ப்பிணிகளை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு, பிரசவமும் நடந்தது. அதில், பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் குறித்த எவ்வித அறிகுறியும் கண்டறியப்படவில்லை. தாய்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், பிறந்துள்ள குழந்தைக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாததால், மருத்துவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், அந்தக் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தாய் பால் மூலம், கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பிருக்கின்றதா எனவும் சோதித்து வருகின்றனர். இவ்ளவு கொடூரமான சூழ்நிலையிலும், ஒரு ஆறுதலான விஷயமாக இந்த செய்தியானது பரவி வருகின்றது.

HOT NEWS