மனிதர்களிடம் இருந்து மிருகங்களுக்குப் பரவுமா? ஆய்வின் முடிவு இதோ!

26 March 2020 அரசியல்
coronabat.jpg

இந்தியா முழுவதும் 650 பேரிடம் இந்த கொரோனா வைரஸானது, கண்டறியப்பட்டு உள்ளது. இதனிடையே, இந்த வைரஸ் பரவுவதைக் காட்டிலும், வைரஸ் காரணமாக பரவும் வதந்தி தான், அதிகமாக உள்ளது.

மருத்துவர்களும், சுகாதாரத்துறையும் பல விஷயங்களுக்கு விளக்கமளித்தாலும் பொதுமக்களிடம் பரவி வருகின்ற வதந்திகள் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், விலங்குகளிடம் இருந்து பரவிய இந்த வைரஸானது, மனிதர்களிடமிருந்து மிருகங்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது என, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், வதந்திகள் காட்டுத் தீயாய் பரவின. இது குறித்து, மருத்துவர்களிடம் தமிழன்நியூஸ் கேட்டது.

அதற்கு, மனிதர்களிடம் இருந்து, மிருகங்களுக்குப் பரவாது என மருத்துவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். மிருகங்களிடம் இருந்து தான் உருவாகியிருக்கின்றது என்றாலும், இது மனிதர்களிடம் இருந்து மிருகங்களுக்குப் பரவாது என தெளிவுபடுத்தி உள்ளனர். இதனால், பொதுமக்கள் பயப்பட தேவையில்லை.

பலரும், தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கொண்டு சென்று, காப்பகத்தில் விட்டு வருகின்றனர். அது இனித் தேவை இல்லை என்பது தற்பொழுது தெளிவாகி உள்ளது.

HOT NEWS