கரன் ஜோஹர் பார்டியில் போதை பொருள்! அதிகாரிகள் விசாரணை!

21 September 2020 சினிமா
karanjoharparty.jpg

பாலிவுட் பிரபலமான கரன் ஜோஹர் அளித்த பார்டியில், போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளது என, அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரன் ஜோஹர், அடிக்கடி தன்னுடைய நண்பர்களுக்கும் பிரபலங்களுக்கும் பார்டி வைத்து மகிழ்விப்பவர். அவர் கடந்த ஆண்டு பார்டி ஒன்றினை வைத்திருந்தார். அதில், பல பாலிவுட் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்தப் பார்டி வீடியோவானது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் பலப் பிரபலங்கள் தள்ளாடியபடியும், தன்னிலை மறந்தபடியும் இருக்கின்றனர்.

அந்த வீடியோவின் மீது விசாரணை நடத்த வேண்டும் என, சிராமணி அகாலி தளம் கட்சியினைச் சேர்ந்த மஞ்சிந்தர் சிங் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த வீடியோவில் இருக்கின்றப் பிரபலங்களிடம் போலீசார் விசாரணை நடத்தத் திட்டமிட்டு உள்ளனர். இது தற்பொழுது, பாலிவுட் உலகில் வைரலாகி உள்ளது.

HOT NEWS