தற்பொழுது நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், தென் கொரியத் திரைப்படமான பாரசைட் திரைப்படம் அதிக விருதுகளை வென்றது. இந்தப் படமானது, விஜய் நடித்த மின்சாரக் கண்ணா படத்தின் காப்பி என்றப் புதிய சர்ச்சைக் கிளம்பியுள்ளது.
விஜய், குஷ்பு, ரம்பா, மணிவண்ணன் நடிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருந்த திரைப்படம் மின்சார கண்ணா. இந்தப் படத்தில், காதலியினை கரம் பிடிப்பதற்காக, காதலியின் அக்காவிடம் விஜய் வேலைக்குச் சேருவார். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக, காதலியின் அக்காவின் மனதினை மாற்றி, தன்னுடைய குடும்பத்தினையே உள்ளே கொண்டு வந்துவிடுவார். குஷ்புவின் தங்கையைக் கரம் பிடித்தாரா, குஷ்புவின் மனதினை வென்றாரா என்பது தான் படத்தின் கதை.
இதுவே, பாராசைட் திரைப்படத்தின் கதையாகவும் உருவாகி உள்ளது. இதனிடையே, விஜயின் ரசிகர்கள் மின்சார கண்ணாவிற்கும் ஆஸ்கர் வேண்டும் என கிண்டலாக, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, மின்சார கண்ணா படத்தினைத் தயாரித்த, தேனாண்டாள் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.