திரைப்படங்களில், கருப்பு ரோஜா என ஒரு சிலர் பேசுவதைக் கேட்டு இருப்போம். உண்மையில் கருப்பு ரோஜா உள்ளதா என, பலரும் சந்தேகப்படுகின்றனர். அவர்களுக்காகவே, இந்த தொகுப்பு.
துருக்கி உள்ளிட்ட நாடுகளில், கருப்பு ரோஜாக்கள் வளர்க்கப்படுகின்றன. அந்நாட்டில் நிலவும் தட்ப வெப்பநிலைக் காரணமாக, அங்கு கருப்பு நிற ரோஜாக்கள் பூக்கின்றன. அவை, தற்பொழுது உலகம் முழுக்க கிடைக்கின்றன. அவைகளை, ஆன்லைனில், பணம் கொடுத்து வாங்க இயலும்.
இந்த கருப்பு ரோஜாக்களை, 25 முதல் 50 ரூபாய் வரையிலும் விற்க இயலும். இந்த கருப்பு ரோஜா செடிகளை நம்முடைய வீட்டிலும் வளர்க்கலாம். ரோஜா செடிகளை வளர்ப்பதற்கு, பெரிய அளவிலான வசதிகள் எதுவும் தேவையில்லை. வீட்டில் வீணாகும், சமையல் கழிவுகளைப் பயன்படுத்தியே இந்த செடியினை வளர்க்க இயலும்.
இதுவும் மற்ற ரோஜா செடிகளைப் போலாத் தான் வளரும். ஆனால், சரியான தட்பவெப்ப நிலையானது மிகவும் அவசியம். இல்லையென்றால், இந்தச் செடியில் பூஞ்சைத் தாக்குதல் முதல், பூச்சித் தாக்குதல் வரை அனைத்தும் நடக்கும். எனவே, இதனை கவனமுடன் வளர்ப்பது மிகவும் நல்லது. ஒரு முக்கியக் குறிப்பு, ரோஜா செடிகளுக்கே உரித்தான, அந்த அருமையான நறுமணமும் இந்த பூவில் இருக்கும்.