சித்ராவினை ரக்சன் படம் எடுத்து மிரட்டினார்! சித்ரா தோழியின் பேச்சால் பரபரப்பு!

16 December 2020 சினிமா
vjchitra.jpg

தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவினை, விஜய் டிவியின் ரக்சன் வீடியோ எடுத்து மிரட்டியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த வாரம், சின்னத்திரை நடிகை சித்ரா, தனியார் சொகுசு விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செயத் கொண்டார். அவர் தான் அணிந்திருந்த சேலையில் தூக்கிட்டுக் கொண்டதாக, பிரேதப் பரிசோதனை அறிக்கையானது அவர் மரணம் குறித்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும், பதிவுத் திருமணம் செய்து கொண்ட நடிகை சித்ராவும், அவருடையக் காதலர் ஹேமநாத்தும் எவ்வாறு இருந்தனர் என விசாரிக்க ஆரம்பித்தது போலீஸ்.

தொடர்ந்து ஒன்பது நாட்களாக ஹேமநாத்திடம் விசாரணை நடத்திய போலீஸ். பலத் திடுக்கிடும் தகவல்களைப் பெற்றது. அதில், ஏற்கனவே சித்ராவிற்கும் ஹேமநாத்திற்கும் கருத்து மோதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேலையினையும், பண விஷயங்களையும் தான் பார்த்துக் கொள்வதாக சித்ரா கூறியதாகவும், ஆனால் அதனை ஹேமநாத் மறுத்ததாகவும் வாக்குவாதம் முற்றியத் தருணத்தில், செத்துப் போ எனக் கூறியதாகவும், அதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, ஹேமநாத், தற்கொலையினைத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சித்ராவின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சூழலில், சித்ராவின் தோழி பிரபல யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்தார். அதில், சித்ராவிற்கும் ரக்சனுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும், அப்பொழுது ரக்சனுடன் சித்ரா டேட்டிங் சென்றதாகவும் கூறினார். அப்பொழுது, சித்ராவினை பலவிதமாக வீடியோ எடுத்து, ரக்சன் மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார்.

இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதே போல், சித்ரா இதற்கு முன்னரே தூக்கமாத்திரைகளை அதிகளவில் எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது சின்னத்திரை வட்டாரத்தினை குழப்பத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

HOT NEWS