கொரோனா வைரஸை உருவாக்கியது அமெரிக்காவா? கிளம்பும் புதிய சர்ச்சை!

31 January 2020 அரசியல்
coronavirus2.jpg

கொரோனா வைரஸை அமெரிக்கா உருவாக்கியது என, புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

தற்பொழுது சீனாவில் இருந்து உலகம் முழுவதும், இந்த கொரோனா வைரஸானது பரவி வருகின்றது. இதனிடையே, சர்வதேச நாடுகள் பலவும், சீனாவிற்கான தங்களுடைய விமான சேவையினைத் தடை செய்துள்ளன.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் குடும்பத்தினை சேர்ந்த வைரஸ் ஒன்றின் மீது ஆராய்ச்சி நடத்தப்பட்டு, அதற்கான தடுப்பு மருந்தும் உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறித்த, ஆய்வுக் கட்டுரையானது தற்பொழுது சமூக வலைதளங்களில், காட்டுத் தீ போல் பரவி வருகின்றது.

இதற்கும், தற்பொழுது சீனாவில் பரவி வரும், கொரோனா வைரஸின் புதிய வகை வைரஸிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது புலனாகின்றது. ஆனால், அமெரிக்க செய்த ஆராய்ச்சியில் கொரோனா குடும்பத்தினைச் சேர்ந்த வைரஸேப் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிகப்பட்டுள்ளது. தற்பொழுது வரை, சுமார் 230 பேர் இந்த கொரோனா வைரஸால் மரணமடைந்து உள்ளனர். 13,000க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் காரணமாக, மரணமடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா வைரஸைக் குணப்படுத்த எவ்வித மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில், பல நாட்டு மருந்துகள் பரவி வருகின்றன. இதனை சீன மருத்துவக் குழு மறுத்துள்ளது. இதுவரை, தற்பொழுது பரவி வரும் நோய்க்கு எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என, அது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

HOT NEWS