ISIS–நிஜமும், நிழலும்

10 June 2019 தொழில்நுட்பம்
isis.jpg

தீவிரவாதிகள் அனைவராலும், தலைவனாகப் பார்க்கப்பட்ட ஒசாமா பின் லேடனின் மறைவுக்குப் பிறகு, தீவிரவாதத்தை அழித்துவிட்டோம் என்று கூறியே ஒபாமா 2-வது முறையாக அமெரிக்காவின் அதிபரானார். அதன் பிறகு தீவிரவாத அமைப்புகள் பெரும்பாலும் அடங்கியிருந்தாலும் IS (ISLAMIC STATE) எனப்படும் தீவிரவாத அமைப்பு, தீவிரவாத நடவடிக்கைகளில் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறது. உண்மையில் இந்த அமைப்பே தற்போது உலகில் உள்ள அனைத்து தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

ISIS

ISIS-ILAMIC STATE OF IRAQ AND SYRIA இதுவே இத்தீவிவாத அமைப்பின் சுருக்கம் ஆகும். இவர்கள் "வாஹாபி மரபை" முக்கியக் கருப்பொருளாகக் கொண்டுப் போராடி வருகின்றனர். இவர்களில் ஏகப்பட்ட தளபதிகள் மற்றும் தலைவர்கள் இருப்பினும் அபு-பக்கர்-அல்-பாக்தாதி என்பவரே முக்கியத் தலைவர் ஆவார். உலகில் உள்ள சாதாரண மக்களைப் பொறுத்த வரையில் இந்த அமைப்து மக்களை பிணயக் கைதிகளாகக் கைது செய்து அவர்களை சித்திரவதைச் செய்து அதனை வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர் என்பதே. ஆனால், அது உலகை ஏமாற்றுவதற்கான ஒரு சிறு நாடகமே.

இந்த அமைப்பு மக்களுக்கு எதிராகப் பல நாச வேலைகளைச் செய்கின்றனர் என்றே நம்புகின்றனர்.இது உண்மை என்றாலும், இவர்கள் இதைத் தவிர்த்து பல வேலைகளைச் செய்கின்றனர்.

பணம்

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பணம் இல்லாமல், ஒன்றும் செய்ய இகலாது. எனவே, இவர்கள் ஆட்கடத்தல், கொள்ளையடித்தல், இயற்கை வளங்களை சட்டங்களை மீறிப் பயன்படுத்துதல், ஆயுதவிற்பனை, போதைப் பொருட்களை பல்வேறு நாடுகளுக்குக் கடத்தல் மற்றும் விற்றல், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தல் மற்றும் விற்றல், உடல் உறுப்புகளைத் திருடுதல் மற்றும் விற்பதன் மூலம், கொள்ளை லாபம் அடைகின்றனர். இவர்களின் வருட வருமானம், சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, அப்பாவி மக்களின் உயிரைப் பறித்துத் தங்களை வலிமையானவர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். நம் நாட்டைப் பொறுத்த வரையில், IS-தீவிரவாத இயக்கத்தால் மூளைச்சலவைச் செய்யப்படும் இளைஞர்களை, நம் அரசாங்கம் காப்பாற்றி விடுவதால், பெரியப் பாதிப்புகளுக்கு வாய்ப்பில்லை. இருப்பினும், மும்பைத் தாக்குதல் போன்று மிக மோசமான நிலை நம் நாட்டிற்கு வரக்கூடாதெனில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கடுமையான கண்காணிப்பும் இன்றியமையாத ஒன்றாகும்.

HOT NEWS