இஸ்ரேலில் தேர்தலுக்குப் பிந்தியக் கருத்துக் கணிப்புகள்! மோடியின் நண்பருக்கு சறுக்கல்!

17 September 2019 அரசியல்
benjaminnetanyahu.jpg

தற்பொழுது இஸ்ரேலின் பிரதமராக இருக்கும், பெஞ்சமின் நாத்தன்யாகு மற்றும் இந்தியாவின் பிரதமர் மோடியும் நல்ல நண்பர்கள். தேர்தலில் வாக்கு சேகரிக்கும் பொழுது, மோடியின் பிரம்மாண்ட பேனரை, பெஞ்சமின் தன்னுடைய கட்சியின் கட்டிடத்தில் மாட்டியிருந்தார். அது மட்டுமின்றி, உலகத் தலைவர்களுடன் அவர் இணைந்து எடுத்திருந்த, புகைப்படங்களையும் தொங்க விட்டிருந்தார்.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தியக் கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளன. அதில் அவருக்குப் பின்னடைவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் தான் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் 65 இடங்களை வென்று பெஞ்சமினின் கட்சி, கூட்டணிக் கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைத்து. இருப்பினும், தொடர்ந்து கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளிக்காததால், மீண்டும் செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 120 இடங்களுக்கான போட்டியில், அந்நாட்டுக் கட்சிகள் தீவிரமாக போட்டியிட்டு பிரச்சாரம் செய்தனர். தற்பொழுது தேர்தலுக்குப் பின், வெளியாகும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

அதில், பெஞ்சமினின் கட்சி வெறும் 55 முதல் 57 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெரும் எனவும், அவருக்கு போட்டியாக பென்னி கண்ட்ஸ் புளூ மற்றும் அவருடைய கூட்டணிக் கட்சியினரே இருப்பர் எனவும் தகவல்கள் வெளி வந்துள்ளன.

இதனால், பெஞ்சமினின் கட்சியினர் கடும் விரக்தியில் உள்ளனர். தற்பொழுது, அந்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளுமே, சிறிய கட்சிகளின் மீது கண் வைத்துள்ளன. சிறியக் கட்சிகளை தன் பக்கம் இழுத்தால், கண்டிப்பாக ஆட்சி அமைக்க இயலும், என்பதால், அவர்கள் சிறிய கட்சிகளுக்கு தற்பொழுது வெள்ளை கொடி காட்டி வருகின்றனர்.

HOT NEWS