இஸ்ரேல் யுஏஇ பக்ரைன் ஒப்பந்தம்! டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தானது!

16 September 2020 அரசியல்
israeluaebaharain.jpg

இஸ்ரேல், யுஏஇ மற்றும் பக்ரைன் நாடுகளுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தமானது, தற்பொழுது டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

இஸ்ரேல் நாட்டினை தனி நாடாக அறிவித்ததற்கு, மத்திய கிழக்கு நாடுகளான ஈராக், எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா, ஈரான், பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இருப்பினும், 1994ம் ஆண்டு ஜோர்டான் நாடு இஸ்ரேல் நாட்டுடன் அமைதி ஒப்பந்தத்தினை செய்து கொண்டது. அதே போல், 1997ம் ஆண்டு எகிப்து நாடு இஸ்ரேல் நாட்டுடன் அமைதி உடன்படிக்கையினைச் செய்து கொண்டது.

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் உள்ளிட்டப் பல நாடுகள், இஸ்ரேலுக்குத் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து வந்தன. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில், அமைதிக்கு பங்கம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையினை உன்னிப்பாக கவனித்து வந்த அமெரிக்கா, இஸ்ரேலிற்காக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆரம்பித்தது. அதன்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில், பெரிய அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இன்று இஸ்ரேல் நாட்டு அதிபர் பென்ஜமின் நாத்தன்யாகூ, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா பின் ஜியாத் நெஹ்யான் மற்றும் பக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் லத்தீப் ஜியானி ஆகியோர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மூன்று நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையொப்பம் இட்டு உள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவியப் பதற்றம் தணியும் என்றுக் கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் தேர்தல் வர உள்ளதால், இந்த ஒப்பந்தங்கள் டிரம்பின் செல்வாக்கினை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

HOT NEWS