விக்ரம் லேண்டரைத் தேடும்பணி தீவிரம்! ஆர்பிட்டர் மூலம் ஆராய்ச்சி செய்யும் இஸ்ரோ விஞ்ஞானிகள்!

08 September 2019 அரசியல்
ksivan.jpg

நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில், சந்திராயன்2 திட்டத்தின் மூலம், நிலவின் தென்பகுதிக்கு தன்னுட, சந்திராயன்2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டரை, தரையிறக்க முயற்சி செய்தது இஸ்ரோ. ஆனால், 2.1 ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், தன்னுடைய தொலைத்தொடர்பை இழந்து, நமக்கு அதிர்ச்சி அளித்தது. இதன் காரணமாக, இஸ்ரோவின் தலைவர் திரு. சிவன் கண் கலங்கினார்.

இது உலகளவில் பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில், மாலையில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிக்குப் பேட்டியளித்த திரு சிவன் அவர்கள், சந்திராயன் திட்டம் 95% வெற்றிப் பெற்றுவிட்டது. விக்ரம் லேண்டர் தரையிறங்கியிருந்தால், அந்தத் திட்டம் முழு வெற்றி. ஆனால், துரதிர்ஸ்டவசமாக அது நடைபெறவில்லை.

விக்ரம் லேண்டர் விண்கலம் நிலவில், சுமார் ஒரு வருடம் ஆய்வு செய்யும் சக்தியுடன் இருந்த விக்ரம் லேண்டரை அடுத்த 14 நாட்களுக்குள் கண்டுபிடிக்கும் முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலவினை சுற்றி வரும் ஆர்ப்பிட்டரின் பேட்டரி, நல்ல நிலையில் இருப்பதால், அது 7.5 ஆண்டுகள் வரை இயங்கும் சக்தியைக் கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த ஆர்பிட்டரின் உதவி கொண்டு விக்ரம் லேண்டர் விண்கலத்தை, விஞ்ஞானிகள் தேடுவதனைப் பற்றியும் சிவன் கூறினார்.

HOT NEWS