இந்தியாவிற்கு தனி விண்வெளி மையம்! இஸ்ரோ தலைவர் அறிவிப்பு!

15 June 2019 தொழில்நுட்பம்
ksivan.jpg

இந்தியாவிற்கு என்று, தனி விண்வெளி மையம் உருவாக்கப்படும் என இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை 15ம் தேதி சந்திரனுக்கு சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்புவது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார், இஸ்ரோவின் தலைவர் கே.சிவன்.

அப்பொழுது, ககன்யான் திட்டத்தின் மூலம் 2022க்குள் மனிதர்களை நாம் விண்ணுக்கு அனுப்புவோம் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் நாம் சர்வதேச விண்வெளி மையத்தில் அங்கமாக இல்லை. அதனால், இந்தியாவிற்கென தனியாக ஒரு விண்வெளி மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், பேசி அவர் நம்முடைய விண்வெளி மையம் மிகச் சிறியதாக இருக்கும். அது நுண்ணுயிரியல் ஆய்விற்குப் பயன்படுத்தப்படும். அதன் எடை தோராயமாக 20 டன் மட்டுமே இருக்கும் எனவும் கூறினார்.

இந்தத் திட்டம் அரசிடம் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். அரசாங்கம் அனுமதி அளித்ததும், இந்தத் திட்டத்தை 7 ஆண்டுக்குள் நிறைவேற்ற முடியும் எனவும் கூறினார்.

இந்தியாவைப் போன்று, சீனாவும், தனக்கென தனியாக ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS