தொடர்ந்து இரண்டாவது நாளாக, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், 77 கோடி ரூபாயினை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
பிகில் படத்தில், விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம், படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என, வருமான வரித்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில், சோதனையில் ஈடுபட்டனர். ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பண உதவி செய்த அன்புச் செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று நெய்வேலியில் மாஸ்டர் சூட்டிங்கின் பொழுது, விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், மூன்று முதல் ஐந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சுமார் 77 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தினை, அன்புச் செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றியதாகவும், விஜயின் கணக்குகள் தெளிவாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனால், இன்றும் மாஸ்டர் பட சூட்டிங் ரத்தானது. ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இருந்தும் எதுவும் பெறவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.