கல்கி ஆசிரமத்தில் அள்ள அள்ள வரும் பணம்! 5வது நாளாக தேடியும் முடியாத விசாரணை!

22 October 2019 அரசியல்
kalkibhagavan.jpg

தொடர்ந்து நேற்று 5வது நாளாக நடைபெற்ற வருமான வரிச் சோதனையிலும், கட்டுக் கட்டாக பணம் எடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் கல்கி ஆசிரமத்தில் நிகழ்ந்துள்ளது.

கல்கி பகவானுக்கு சொந்தமான நிறுவனங்கள், ஆசிரமங்கள் மற்றும் வீடுகள் என சுமார் 40 இடங்களில், 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், 90 கிலோ தங்கமும், 64 கோடி ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டன. மேலும், 406 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள், ஆவணங்கள், முதலீடுகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

ஆப்பிரிக்கா, அரேபியா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில், 100 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பில் தீவுகளும் வாங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 4000 ஏக்கர் நிலங்கள் கணக்கில் காட்டப்படாமல் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹெச்டிஎப்சி வங்கி உட்பட பல வங்கிகள் மூலம், பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதனையும், ஹாவாலாப் பணப் பரிமாற்றத்தினையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும், கல்கியின் மகனான கிருஷ்ணாவின் பெயரில் இயங்கும் நிறுவனங்களையும், அவருடையப் பெயரிலும், பிணாமியின் பெயரிலும் இருக்கும் சொத்துக்களையும், வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

HOT NEWS