கல்கி பகவான் ஆசிரமத்தில் ஐடி ரெய்டு! 33 கோடி ரூபாய் பறிமுதல்!

17 October 2019 அரசியல்
kalkibhagavan.jpg

இந்திய அளவில் புகழ் பெற்ற ஆன்மீகவாதியான, கல்கி பகவான் ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், கணக்கில் வராத 33 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.

ஆந்திரபிரதேசத்தில் உள்ள அவருடைய நிறுவனங்கள், ஆசிரமத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், பல நிலம் சம்பந்தப்பட்ட பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. விஜய குமார் நாயுடுவாக இருந்த பொழுது, இந்திய எல்ஐசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர், பின்னர் தன்னைத் தானே இந்த கலியுகத்தின் கல்கி பகவான் என அறிவித்துக் கொண்டார்.

இதன் காரணமாக, இவரைப் பின்பற்றப் பல லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இவருக்கு ஒரு மகன் இருக்கின்றார். அவர் இந்தியாவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமான நிறுவனத்தினை நடத்தி வருகின்றார். தற்பொழுது அவர் அமெரிக்காவில் இருக்கின்றார்.

இவருடையப் பெயரில், இந்தியாவின் பலப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவிலும் பல ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும், வருமான வரித்துறைக் கண்டுபிடித்துள்ளது. மேலும், தற்பொழுது, அதிகாரிகள் தொடர்ந்து, தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.

HOT NEWS