கல்கி பகவான் ஆசிரமத்தில் கட்டுக் கட்டாக பணம்! அதிர்ந்த ஐடி!

19 October 2019 அரசியல்
kalkibhagavan.jpg

கல்கி பகவான் ஆசிரமத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டில், கணக்க்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய் பணத்தினை, வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

நேற்றும் அவருடைய ஆசிரமங்கள், நிறுவனங்கள் மற்றும் வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் பல கணக்கில் காட்டப்படாத நகைகள், ஆபரணப் பொருட்கள், வைரம், தங்கம், வெள்ளி போன்றப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாட்டு கரன்சி, வெளிநாட்டு கம்பெனிகளில் முதலீடு, வெளிநாடுகளில் ஆசிரமங்கள் என பல இடங்களில் பணமானது, சொத்தாகவும் முதலீடாகவும் உள்ளது.

ரொக்கமாகவே, சுமார் 60 கோடிக்கும் அதிகமானப் பணத்தினை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது. மேலும், தொடர்ந்து தற்பொழுது வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விஜயகுமார் என சென்னையில் வாழ்ந்தவர், தன்னை கலியுகத்தின் கல்கி பகவான் என அறிவித்துக் கொண்டார். அதனை அடுத்து, அவரை சுற்றி தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் வளர ஆரம்பித்தனர்.

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுக்க பல நாடுகளில், அவருடைய அறக்கட்டளைகளும், ஆசிரமங்களும் உள்ளன. மேலும், அவருடைய ஆசிரமத்திற்கு காணிக்கையாக தினமும் பணம் வந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், அவர் வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய வரியை கட்டாததால், இப்பொழுது வருமான வரித்துறை சோதனை செய்துள்ளது.

HOT NEWS