இட்-2 திரைவிமர்சனம்!

09 September 2019 சினிமா
smp.jpg

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இந்த இரண்டுப் படங்களுமே உலகப் புகழ் பெற்ற ஸ்டீபன் கிங்கின் புத்தகத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது. முதல் பாகத்தினை பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். முதல் பாகத்தில், உனக்கு ஒரு பலூன் தரட்டா என, குழந்தைகளைக் கடதிக் கொல்லும், ஒரு ஜோக்கர் பேயிடம் இருந்து, எப்படி நம் கதாநாயகர்கள் தப்பித்தார்கள் என்பதனை திகிலுடன் கூறியிருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இந்த இரண்டுப் படங்களுமே உலகப் புகழ் பெற்ற ஸ்டீபன் கிங்கின் புத்தகத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது. முதல் பாகத்தினை பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். முதல் பாகத்தில், உனக்கு ஒரு பலூன் தரட்டா என, குழந்தைகளைக் கடதிக் கொல்லும், ஒரு ஜோக்கர் பேயிடம் இருந்து, எப்படி நம் கதாநாயகர்கள் தப்பித்தார்கள் என்பதனை திகிலுடன் கூறியிருந்தனர்.

படத்தில் முதலில் நாம் பாராட்ட வேண்டியது நடிகர்களின் தேர்வு. ஆம், முதல் பாகத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள், 27 வருடங்கள் கழித்து, வளர்ந்து இருக்கின்றனர். ஆனால், அந்தக் குழந்தைகள் தான் வளர்ந்துள்ளனர் என நம்மையே நம்ப வைக்கும் அளவுக்கு, சரியான நடிகர்களை அந்ததந்தக் கதாபாத்திரங்களுக்கு, தேர்வு செய்து அசத்தியுள்ளனர்.

படத்தில் வரும் பின்னணி இசை, நம்மை நடுங்க வைக்கின்றது என்றுக் கூறினால், அது மிகையாகாது. கிராபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக இருப்பதால், நம்மால், படத்திற்கு வெளியில் யோசிக்கவும் முடியாது, கதையை விட்டு நம்மால் விலகவும் முடியாது. முதல் பாதி மட்டும் சற்று நீளமாக இருப்பது போன்று உள்ளது. ஒவ்வொரு கதாப்பாத்திரனைப் பற்றியும், விவரித்தப் பின்னரே படம் ஆரம்பிக்கின்றது எனலாம்.

இட் முதல் பாகத்தினைப் பார்க்காமலேயே, இந்த இட்-2 திரைப்படத்தினை நீங்கள் பார்க்கலாம். அந்த அளவிற்கு படத்தின் கதையினை தெளிவாக விளக்கியிருக்கின்றனர். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரமும், விளக்கமாக உள்ளதால், பர்ஸ்ட் பார்ட் பார்க்க வேண்டிய தேவையில்லை. இதிலுள்ள சுவாரஸ்யமே, இந்த பென்னிவைஸ் எனப்படும், அந்த ஜோக்கர் யார், பேயா, மனிதா, அரக்கனா, மிருகமா அல்லது ஏலியானா என அதற்கும் ஒரு கதை வைத்துள்ளனர்.

படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பு, பாராட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது எனலாம். முதல் பாகத்தில் அந்தக் குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் முதலானவற்றை, அப்படியே இந்தப் படத்திலும் வைத்துள்ளது சிறப்பு. அதையும், அந்த நடிகர்கள் நன்றாக வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர். பேய் என்றாலே, இருட்டு, பின்னாடி இருந்து பிடிப்பது, தள்ளிவிடுவது, கடிப்பது, அடிப்பது என்பது போன்றக் காட்சிகளே இருக்கும். ஆனால், இட் திரைப்படங்களின் பலமே, இந்த ஜோக்கர் கதாபாத்திரம் தான்.

இதுதான் இந்தப் படத்தின் முதுகெலும்பு எனலாம். பெரும்பாலும், முன்னால் வந்து மிரட்டுவது தான் இப்படத்தின் வெற்றிக்குக் காரணம் ஆகும். அந்த ஜோக்கரின் சிரிப்பு போதும் நம்மைப் பயமுறுத்த. இந்தப் படத்திற்கு செல்பவர்கள், கையில் ஐடி கார்டு வைத்துக் கொள்ளவும். திரையறங்குகளில், வயதினை சோதித்தப் பின்னரே, உங்களை உள்ளே அனுமதிப்பர். குழந்தைகளையும், வயதில் மூத்தவர்களையும், இதயம் பலவீனமாவர்களையும் இப்படத்திற்கு, அழைத்துச் செல்ல வேண்டாம்.

ரேட்டிங் 4.2/5

HOT NEWS