முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை படமாக இயக்கி வரும் மூன்று இயக்குநர்கள் மீதும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுக்கும் ஏஎல்விஜய், மற்றொரு இயக்குநர் மற்றும் வெப் சீரீஸாக எடுக்கும் கௌதம் வாசுதேவ் மேனனை ஆஜராகி விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.