உலகளவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டும் என, அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நோய்க்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சிக்காக தன்னுடைய, தொண்டு நிறுவனம் சார்பில் 41 கோடி ரூபாயும், 59 கோடி ரூபாயினை, பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்காகவும் அவர் அளித்துள்ளதாக, அமெரிக்க செய்தி நிறுவனமான பூலூம்பெர்க் தெரிவித்துள்ளது.
சீனாவின் மாபெரும் பணக்காரரான ஜாக் மா, சீனா மக்கள் கஷ்டப்படுவதைப் பார்க்க இயலவில்லை எனவும் உடனிருப்பவர்களிடம் பேசி வருகின்றாராம்.