இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பாலிவுட் நடிகையான, ஜாக்குலின் பெர்ணான்டஸ் யோகா செய்யும் வீடியோவானது, சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான்கான் உட்பட, பலப் பிரபலங்களுடன் இணைந்து நடித்தவர் ஜாக்குலீன் பெர்ணான்டஸ். இவர் தற்பொழுது அட்டாக் என்றப் படத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு, சமூக வலைதளங்களில், பெரிய அளவில் ரசிகர் படையே உள்ளது.
அவர்கள் இவரை மிகவும் நேசிக்கின்றனர். இந்நிலையில், அவர் தற்பொழுது வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், அவர் யோகா செய்யும் காட்சியானது வைரலாகி வருகின்றது. அந்த யோகாவிற்காக ஒரு சிறிய உடையையே அவர் அணிந்துள்ளார். இந்த வீடியோவானது, பல லட்சம் பார்வையாளர்களையும், லைக்குகளையும் அள்ளியுள்ளது.