பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 10,000! ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!

11 June 2020 அரசியல்
jaganmohanreaddy.jpg

கொரோனா வைரஸால், வேலையிழப்பு, வருமானம் இழப்பு உள்ளிட்டவைகளை எதிர்கொண்டுள்ள ஊழியர்களுக்கு, தலா 10,000 ரூபாயினை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ், வேகமாகப் பரவி வருகின்றது. இதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் தொடங்கி வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், அன்றாடம் கூலி வேலைக்குச் சென்றவர்கள் முதல், பெரும் நிறுவன முதலாளிகள் வரைப் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திராவில் ஜகனன்னா என்ற புதிய திட்டம் ஒன்றினை, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.

அதன்கீழ், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், தையல்காரர்கள் ஆகியோர் சுமார் 2,47,040 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாயினை அவர் வழங்கியுள்ளார். அவர்களுடைய வங்கிக் கணக்குகள் பெறப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்குகளுக்கு அப்பணமானது, அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS