ஜல்சக்தி துறையின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்! கதறும் விவசாயிகள்!

01 May 2020 அரசியல்
river.jpg

தமிழகத்திற்காக உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், ஜல்சக்தி துறையின் கீழ் இருந்தாலும், அதன் அதிகாரம் குறையவோ அல்லது மாற்றம் அடையவோ கிடையாது என, பொதுப்பணித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் மணிவாசன் இது குறித்து, அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த 24ம் தேதி அன்று, மத்திய அரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில், காவிரி நீர் மேலாண்மை வாரியம், மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டப்போராட்டத்தின் காரணமாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.

இந்த ஜல்சக்தித் துறையின் கீழ், கோதாவரி ஆணையமும், கிருஷ்ணா ஆணையமும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, ஜல்சக்தித் துறையின் கீழ் இயங்கும், ஆணையங்கள் மற்றும் அமைப்புகளின் விதிகள், பணிகள் ஆகியவைகளின் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரத்தில், எவ்வித மாற்றமும் இல்லை. இதனை மத்திய அரசும் உறுதி செய்துள்ளது.

எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

HOT NEWS