பிரபல அழகுக் கலை நிபுணர், புதிதாக டாடூ குத்தியதாலும், தன்னுடைய ஹேர்ஸ்டைலை மாற்றியதாலும், ஒரே நாளில் சுமார் 3 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை இழந்துள்ளார்.
ஜேம்ஸ் சார்லஸ் என்றப் புகழ் பெற்ற அழகுக் கலை நிபுணர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் ஒரு பதிவினை இட்டு இருந்தார். அதில், முடி வளர்வதற்கான ஒரு மருந்தினைப் பற்றியும் கூறியிருந்தார். இதனிடையே, அவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலைப் பெண்ணைப் போன்றும், முகத்தினையும், பெண்ணைப் போன்று மேக்கப் செய்து இருக்கிறார். அது மட்டுமின்றி, உடம்பில் பெண்களுக்குக் குத்துவதுப் போன்ற டாட்டூக்களை குத்தியிள்ளார்.
இது அவருடைய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 1.5 மில்லியன் யூடியூப் சப்ஸ்க்கைரபர்களை வைத்திருந்த, ஜேம்ஸ் சார்லஸ் தற்பொழுது, 1.2 மில்லியன் யூடியூப் சப்ஸ்க்ரைபர்களையே வைத்துள்ளார். இதற்கு முக்கியக் காரணமாக அனைவராலும் கருதப்படுவது, அவருடைய இந்த ஹேர்ஸ்டைலே என அவர்களுடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.