ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகளவில் கோடிக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தப் படங்களை எடுத்து சளித்துப் போய் விட்டது என பட தயாரிப்பு நிறுவனம் கூறினாலும், இதனை ரசிக்கும் ரசிகர்களுக்காக, வேறு வழியில்லாமல் இப்படங்களை எடுத்து வருகிறது. கடைசியாக வெளிவந்த ஸ்பெக்டர் திரைப்படம் இந்தப் படங்களின் வரிசையில் மிகப் பெரிய சொதப்பல் என்றாலும், பாக்ஸ் ஆபிசில் வெளுத்து வாங்கியது.
இதனால், பட தயாரிப்பு நிறுவனம் மீண்டும் குஷியானது. அடுத்ததாக ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தினை உருவாக்கும் முயற்சியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வந்தது. கதை முதலில் செட் ஆகவில்லை. பின்னர், ஜேம்ஸ் பாண்ட்டாக நடிக்கும் டேனியல் க்ரெய்க் முடியாது என்றார். பின்னர், தயாரிப்புப் பிரச்சனை என தற்பொழுது ஒரு வழியாக, படக்குழுவையும், படத்தினைப் பற்றியும் தயாரிப்பு நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் நோ டைம் ட்டூ டை ஆகும். இந்தப் படத்திலும், நம்ம டேனியல் க்ரெய்க் தான் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க உள்ளர். இப்படம் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என, படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனைத் தற்பொழுது, ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.