டெல்லிப் பல்கலைக்கழகத்தில் போலீசார் வெறித்தனமான தாக்குதல்! தலைவர்கள் கண்டனம்!

16 December 2019 அரசியல்
jamiaprotest1.jpg

டெல்லியில், தேசியக்குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜாமியா மில்யா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்தின் பொழுது, மூன்று பேருந்துகள் உட்பட, பல வாகனங்கள் தீக்கு இறையாகின. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதனையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி உட்பட சில விஷயங்களில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதனை கண்டித்து, தற்பொழுது நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில், போராட்டம் வெடித்துள்ளது.

இது குறித்து, வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ள ஜாமிய பல்கலைக் கழக பேராசிரியர் நஜ்மா அக்தர், பல்கலைக் கழக நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெறாமல், போலீசார் உள்ளே புகுந்தனர். பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி என எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அனைத்திலும் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

நூலகங்களில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீதும், தாக்குதல் நடத்தினர். இது கடும் கண்டனத்திற்கு உரியது. எங்களால், இந்த விஷயத்தினை எந்த அளவிற்கு கொண்டு செல்ல இயலுமோ, அந்த அளவிற்கு இந்த விஷயத்தினைக் கொண்டு செல்வோம். போலீசார் செய்தது மாபெரும் தவறு எனக் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, மும்பை ஐஐடி மாணவர்கள், கேரள ஐஐடி மாணவர்கள் மவுன ஊர்வலம் நடத்தி உள்ளனர்.

HOT NEWS