இரண்டு யூனியனாக பிரிந்த காஷ்மீர்! இனி ஜம்மூ-காஷ்மீர் மற்றும் லடாக்!

31 October 2019 அரசியல்
kashmirfree.jpg

இந்தியாவிலேயே முதன் முறையாக, ஒரு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட 5ம் தேதி அன்று, காஷ்மீர் மாநிலத்திற்குக் கொடுக்கப்பட்டு வந்த, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால், காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு நடைபெற்றது. பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஒரு சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளினை முன்னிட்டு, நேற்று இரவு முதலே, புதிதாக கொண்டு வரப்பட்ட 370 சட்டப்பிரிவு ரத்து அமலுக்கு வந்தது.

அதன்படி, காஷ்மீர் மாநிலத்தில் இருந்து, லடாக் தனியாகப் பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த யூனியன் பிரதேசம் நேரடியாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே போல, ஜம்மூ-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்ட சபை, தேர்தல் என மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள் இருந்தாலும், அவைகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதனையடுத்து, அந்த யூனியன் பிரதேசங்களுக்கான துணை நிலை ஆளுநர்கள் கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் ஆர் கே மாத்தூர் ஆகியோர் இன்று பதவி ஏற்கின்றனர்.

HOT NEWS