சைக்கிளில் காய்கறி விற்ற பெண்! பைக் வாங்கித் தந்த காவலர்கள்!

14 May 2020 அரசியல்
janmonigogoi.jpg

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. மே-17க்குப் பிறகும், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, பிறத் தேவைகளுக்கு வெளியில் வரக் கூடாது எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே அசாமில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்று உள்ளது. அசாம் மாநிலம், திப்ரூகார்க் மாவட்டத்தினைச் சேர்ந்தவர் ஜன்மோனி கோகோய். 20 வயது நிரம்பிய இவரும், இவருடையத் தாயாரும் காய்கறிகளை விற்று, குடும்பத்தினை நடத்தி வருகின்றனர். இவருடையத் தந்தைக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் இருந்தே, நடக்க இயலாது.

மிகவும் ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்த கோகோய்க்கு, பணப் பிரச்சனையால் கல்வியில் தடை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் தன் தாயுடன் இணைந்து, காய்கறிகளை விற்று வருகின்றார். இவர் தன்னுடைய சைக்கிளில் சென்று, காய்கறிகளை விற்று வருகின்றார். அசாமின் திப்ரூகார்க் மாவட்டத்தினைச் சேர்ந்த இவர், தன்னுடையக் கிராமத்தில் இருந்து பலக் கிராமங்களுக்குத் தன்னுடைய சைக்கிளில் சென்று காய்கறிகளை விற்று வருகின்றார்.

இந்த செய்தியானது, செய்தி நிறுவனங்களால் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை அழைத்த அம்மாநிலக் காவல்துறையானது அவருக்கு உதவி செய்ய முன் வந்தது. அவருக்கு முதலில் பண உதவி செய்யவதாகக் கூறியது. ஆனால், அதனை அப்பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து, அசாம் மாநிலத்தின் தலைமைக் காவல்துறை அதிகாரியான ஜோதி மகாந்தா, காவலர்கள் சார்பில், டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கினை வாங்கித் தந்துள்ளார்.

இதனால், அப்பெண்மணி இனி சைக்கிளில் சென்று கஷ்டப்பட்டு காய்கறி விற்காமல், பைக்கில் சென்றே எளிதாக காய்கறிகளை விற்கலாம். அதிக தூரம் சென்று, காய்கறிகளை விற்க இயலும் எனவும், அந்தப் பெண் முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு உதாரணம் எனவும் கூறியிருக்கின்றார்.

இது குறித்து பேசிய கோகோய், காவலர்கள் எனக்கு உதவியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இனி, என்னால் நீண்ட தூரத்திற்கு கஷ்டமில்லாமல் பைக்கில் சென்று காய்கறிகளை விற்க இயலும். மேலும், விரைவாக வீட்டிற்குத் திரும்ப இயலும் எனவும் கூறியிருக்கின்றார். தற்பொழுது நடைமுறையில் உள்ள லாக்டவுன் காரணமாக, காய்கறி விற்பனைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS