ஜனவரி 6ம் தேதி பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது!

28 December 2019 அரசியல்
thirumalai1.jpg

வருடா வருடம் மார்கழி மாதம் ஏகாதசி திதியன்று, வைஷ்ணவ திருக்கோயில்களில், பரமபத வாசல் திறக்கப்படும். அதே போல், இந்த முறை வருகின்ற ஜனவரி மாதம் ஆறாம் தேதி அன்று, பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது.

நேற்று (டிசம்பர் 27ம் தேதி) அன்று, பெருமாளுக்கான பகல்பத்து சேவைத் தொடங்கியது. இதனை முன்னிட்டு, பெருமாள் திருத்தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. இந்த பகல்பத்து சேவையானது, வருகின்ற ஜனவரி 5ம் தேதியுடன் நிறைவடைகின்றது. அதற்கு அடுத்த நாளான, ஜனவரி 6ம் தேதி ஏகாதசி திதியன்று, வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகின்றது. அன்று, பெருமாள் கோவில்களின் வடக்குப் பகுதியில் உள்ள பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது.

ஸ்ரீரங்கம், அழகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலையில் சொர்க்க வாசல் எனப்படும், பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. பல கோயில்களில், மாலையில் தான் பரம்பத வாசல் திறக்கப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள் இராபத்து சேவை தொடங்கும். இதற்கான முன்னேற்பாடுகள், தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

HOT NEWS