அமெரிக்காவின் ஜில்லீட் சைன்ஸஸ் இன்ங் நிறுவனத்தின், ரெம்டெசிவர் மருந்தானது தற்பொழுது உலகம் முழுக்க, பிரபலமாகி வருகின்றது. அந்த அளவிற்கு, அது கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் என நம்பப்படுகின்றது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாக பரவி வருகின்றது. இதில், அமெரிக்கா தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், ஜப்பான் தன்னுடைய நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஜப்பானில் தற்பொழுது வரை, 15575 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், 590 பேர் மரணமடைந்து உள்ளனர். 5,146 பேர் இந்த நோயில் இருந்து குணமாகி உள்ளனர்.
இந்தியாவில் இருந்து, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை, இந்த கொரோனா வைரஸிற்கு எதிராக உலக நாடுகள் பயன்படுத்த வாங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் ரெம்டெசிவர் மருந்தினை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. ஜப்பான் அரசாங்கம், இந்த மருந்தினை மிக அவசரமாக, பரிசோதனை செய்துள்ளது. வெறும் மூன்று நாட்களே இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்ததால், இந்த மருந்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஜப்பான் அரசாங்கம். ஜப்பானின் முதல் கொரோனா வைரஸிற்கான அதிகாரப்பூர்வ மருந்தாக, இந்த ரெம்டெசிவர் மருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.