ஜப்பானில் இன்று தொடங்குகியது அவசர நிலை

07 April 2020 அரசியல்
shinzoabe.jpg

ஏப்ரல் 7ம் தேதி முதல் அவசர நிலை அறிவிக்கப்படும் என, ஏற்கனவே ஜப்பான் பிரதமர் அறிவித்ததால், இன்று அவசர நிலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகின் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் நாடு என்றப் பெருமையினைப் பெற்றது ஜப்பான். அந்த நாட்டிலும் தற்பொழுது, கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. தற்பொழுது வரை அந்த நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களாக 3654 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். அதில், 73 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நோயிலிருந்து 592 பேர் மீண்டுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் இந்த வைரஸானது, வேகமாகப் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் ஆறாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது என, ஏற்கனவே ஜபான் அரசு அறிவித்து இருந்தது. இருப்பினும், இந்த ஊரடங்கிற்குள் பெரிய அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இது குறித்து பேசிய ஜப்பான் அதிபர் சின்சோ அபே, ஏப்ரல் 7ம் தேதி முதல் அவசர நிலைப் பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளேன் எனத் தெரிவித்தார். இந்த அவசர நிலையானது, அடுத்த ஒரு மாதங்கள் இருக்கும் எனவும் அவர் கூறினார். ஆனால், குறைந்தது ஆறு மாதங்களுக்கு இந்த அவசர நிலை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக, ஜப்பானைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர். தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, ஜப்பானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

HOT NEWS