உடல்நலம் பாதிப்பு! பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே!

31 August 2020 அரசியல்
shinzoabe.jpg

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, உடல்நலக் குறைவு காரணமாக, தன்னுடைய பிரதமர் பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வந்து கொண்டிருந்தார் ஷின்சோ அபே. இது குறித்துப் பல விதமாக, ஊடகங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டன. இதனைத் தொடர்ந்து, அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது அவர் முழு நேர ஓய்வில், மருத்துவ உதவியினைப் பெற உள்ளார்.

இதே போல் ஏற்கனவே, 2006ம் ஆண்டு 2007 வரை ஆட்சியில் இருந்த அவர், அப்பொழுதும் உடல்நிலைக் காரணமாக, தன்னுடையப் பதவியினை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து 2012ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக பதவியில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS