இந்தியாவிற்கு ஜப்பான் ஆதரவு! ஓரங்கட்டப்படும் சீனா!

04 July 2020 அரசியல்
japanflag.jpg

கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் பிரச்சனைக்காக, தற்பொழுது இந்தியாவிற்கு ஜப்பான் அரசு ஆதரவு அளித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள லே மற்றும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகின்றது. இந்தப் பகுதிகளில், இரு நாட்டு இராணுவமும், தன்னுடையப் படைகளை குவித்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையில், இந்திய அரசு பல நாடுகளிடமும், தனக்குத் தேவையான ஆயுதங்களை வாங்கிக் குவித்த வண்ணம் உள்ளது.

மேலும், பல நாடுகளின் ஆதரவினையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ வர்தன், இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரக அதிகாரியான சட்டோஷி சுஷூகி உடன், நேற்று உரையாடினார். அப்பொழுது, கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் பிரச்சனைக் குறித்தும், இந்தியா மற்றும் சீனாவின் நிலைக் குறித்தும் எடுத்துரைத்தார்.

இது பற்றி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த ஜப்பான் தூதர், எல்லையில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையினை தவிர்த்து, தன்னிச்சையாக மற்றும் மாற்று முயற்சியினை ஈடுபடுவதை வன்மையாக ஜப்பான் கண்டிக்கின்றது என்று கூறியுள்ளார். ஏற்கனவே, இந்தியாவிற்கு இஸ்ரேல், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, தைவான், மியான்ம்ர உள்ளிட்ட நாடுகள் மறைமுக ஆதரவினை வழங்கி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது ஜப்பானும் இந்தியாவிற்கு ஆதரவு வழங்கி உள்ளதால், சீனாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே, சீனாவில் இருந்து பரவி உள்ள கொரோனா வைரஸ் காரணமாக, சீனாவின் மீது உலக நாடுகள் பலவும் கோபத்தில் உள்ளன. இந்த சூழ்நிலையில், சீனாவினைப் பழிவாங்க வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய சீனப் பிரச்சனை ஏற்பட்டு உள்ளதால், இந்தியாவிற்கு தங்களுடைய ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்து வருகின்றன.

HOT NEWS