விரைவில் ஜப்பானுக்கும் விண்வெளிப் படை அமைக்கப்படும்! அதிபர் அறிவிப்பு!

21 January 2020 அரசியல்
spacearmy.jpg

அமெரிக்கா விண்வெளிப் படையுடன் இணைந்து, ஜப்பானும் தன்னுடைய விண்வெளிப் படையினை விண்வெளியில் உருவாக்க உள்ளது என, அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், விண்வெளியில் தற்பொழுது மாபெரும் அச்சுறுத்தல் நிலவி வருகின்றது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள், விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்களின் செயல்பாட்டில் குறுக்கிடவும், அழிக்கவும் வல்ல ஆயுதங்களை உருவாக்கி இருப்பதாகக் கூறியிருக்கின்றார். மேலும், இது நம் நாட்டிற்கு கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து, நம்முடைய நாட்டினைப் பாதுகாப்பதற்கு விண்வெளிப் படையானது விரைவில் அமைக்கப்படும் எனவும், அது நம் நாட்டின் வான்வெளிப் படையுடன் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் இந்த விண்வெளிப் படையானது, அமெரிக்காவின் விண்வெளிப் படையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS