அரசு வசமாகும் ஜெயாவின் வேதா இல்லம்! அவசர சட்டம் பிறப்பிப்பு!

22 May 2020 அரசியல்
jayalalitha.jpg

மறைந்த முன்னாள் முதல்வரும், அஇஅதிமுக தலைவருமான, ஜெயலலிதாவின் இல்லமானது தற்பொழுது அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அவருடைய வீடானது நினைவு இல்லமாக மாற்றப்படும் என, அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்த சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ளதால், அதற்குள் இதனை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்றுப் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் அவசர சட்டம் ஒன்றினை தமிழக அரசு இயற்றியது. அதில், மறைந்து முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லமானது அரசு வசம் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும் அதனை அவருடைய நினைவு இல்லமாக மாற்ற உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

மேலும், அந்த இல்லத்தினை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு, அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எனவும், வேதா இல்லத்தினை நினைவில்லமாக்கும் செயலினை, அந்த அறக்கட்டளை செய்யும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இதனால், அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HOT NEWS