ஜெயம் ரவியின் அடுத்தப் படம் அறிவிப்பு! ஜேஆர்25!

12 October 2019 சினிமா
jr25.jpg

ஜெயம் ரவி நடிக்கும், 25வது படத்தின் பெயர் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் ஜெயம் ரவி, தற்பொழுது தன்னுடைய 25வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய 25வது படமான, பூமி திரைப்படத்தின் பெயரினை வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தினை இயக்குநர் லட்சுமணன் இயக்குகின்றார். நிதி அகர்வால் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஹெச்எம்எம் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு, நடன இயக்குநர் பிருந்தா, நடனம் அமைக்கின்றார்.

தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தரும் ஜெயம் ரவியின் இத்திரைப்படமும், வெற்றிப் பெறும் அனைவரும் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS