ஜெயஸ்ரீ சிறுமி எரித்துக் கொலை! அதிமுகவினர் கைது! தலைவர்கள் கண்டனம்!

11 May 2020 அரசியல்
jeyasreekilled.jpg

விழுப்புரம் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தற்பொழுது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் அமைந்துள்ள சிறுமதுரை என்றக் கிராமத்தில் ஜெயபால் என்பவர், தன்னுடையக் குடும்பத்துடன் வசித்து வந்தார். தன்னுடைய சொந்த வீட்டில், சிறியப் பெட்டிக் கடை ஒன்றினை வைத்து நடத்தி வருகின்றார். அவருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயபாலின் தம்பியினை முருகன், கலியபெருமாள் உள்ளிட்ட ஆறு பேர் சேர்ந்து, கையினை வெட்டியுள்ளனர்.

இது குறித்து, வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கடந்த வாரம் என்னுடைய கடைக்கு வந்த அவர்கள், என் மகனை அடித்தனர். இதனிடையே, இது குறித்து வழக்குப் பதிவு செய்வதற்காக திருவெண்ணெய்யல்லூரில் உள்ள காவல்நிலையத்திற்குச் சென்றோம். அந்த நேரத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் மற்றும் கிளைச் செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் ஜெயபால் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்பொழுது, அந்த வீட்டில் இருந்த ஜெயபாலின் மகள், ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். கை மற்றும் கால்களைக் கட்டி, உடலில் மண்ணெய்யை ஊற்றி உள்ளனர். பின்னர், அந்த சிறுமி மீது, தீயினை வைத்து எரித்து விட்டு, அங்கிருந்துத் தப்பிச் சென்றுள்ளனர். தீயில் துடிதுடித்த ஜெயஸ்ரீ, நகன்றே வந்து, வீட்டுக் கதவினை இடித்துள்ளார்.

வீட்டில் இருந்து கரும்புகை வந்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் வீட்டின் கதவினைத் திறந்துப் பார்த்துள்ளனர். அதில், ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அவரை தீயிலிருந்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 95% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில், அவரிடம் போலீசார் மரண வாக்குமூலம் பெற்றனர். அதனடிப்படையில், கலிய பெருமாள், முருகன் உள்ளிட்டோர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடித்தனர்.

பின்னர், அந்த சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்துப் பேசிய போலீசார், இந்த வழக்கில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. முன்விரோதத்தின் காரணமாக, இது நடைபெற்றுள்ளது. சிறுமி ஜெயஸ்ரீயின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

இந்த சம்பவத்திற்கு, திமுக தலைவர் முகஸ்டாலின், சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தினைத் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS