2000 ரூபாய் ஊக்கத் தொகை ஜெகன் மோகன் அறிவிப்பு!

17 April 2020 அரசியல்
jaganmohanreaddy.jpg

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாயானது, ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இந்தியா முழுவதும், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. வருகின்ற மே-3ம் தேதி வரை இந்த ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், வெளி மாநிலங்களுக்குச் சென்று வேலை செய்யும் ஊழியர்கள் சிக்கலில் மாட்டியுள்ளனர். அத்தியாவசிய வசதிகளுக்கு மிகவும் திண்டாடி வருகின்றனர். டெல்லியில் லட்சக்கணக்கானோர் பேருந்திற்காக ஒன்று திரண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில், வேலை செய்கின்ற வெளி மாநிலத்தவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் செய்து தர, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு சத்தான உணவு, பழங்கள், காய்கறிகள் வழங்கவும் கூறியுள்ளார்.

அதே போல், அங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

HOT NEWS