ஆந்திர மாநிலத்தில் வீடு வீடாகச் சென்று ரேசன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தினை, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்.
கொரோனா ஊரடங்குக் காலத்தில், தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று, உதவித் தொகையானது வழங்கப்பட்டது. அந்தத் திட்டமானது, மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. அதே போல், தற்பொழுது ஆந்திரமாநிலத்தில் புதிய சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் நிற்கும் பொழுது, நவரத்னா திட்டம் குறித்து ஜெகன்மோகன் ரெட்டி பேசியிருந்தார்.
அதன்படி, வீடு வீடாக ரேசன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்றுக் கூறியிருந்தார். அதனை இன்று நிறைவேற்றியுள்ளார். இதற்காக 9,260 வாகனங்களை 830 கோடி செலவில் வாங்கியிருக்கின்றது அம்மாநில அரசு. அந்தத் திட்டமானது இன்று துவக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு 50 வீடுகளுக்கும் ஒரு நபரை சுய உதவிக் குழுவின் தன்னார்வலர்களாகத் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
அவர் மூலம், அப்பகுதியில் இருப்பவர்களுக்கு, ரேசன் கடைப் பொருட்களானது வீடுகளுக்கே விநியோகிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டமானது அம்மாநில மக்களிடம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.