திருச்சி நகைக்கடையில் திருட்டு! வடமாநில இளைஞர்களிடம் துருவித் துருவி விசாரணை!

03 October 2019 அரசியல்
lalithajewellerytheft.jpg

திருச்சியில் உள்ள லலிதா ஜீவல்லர்ஸ் நகைக் கடையில், 30 கிலோ தங்கத்தினை பேட் மேன் பட பாணியில், முகத்தில் ஜோக்கர் உட்பட பல மாஸ்க்குகளை அணிந்து திருடி சென்றனர்.

அது சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில், லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகின்றது.

அந்தக் கடையில் நேற்று முன்தினம் இரவு, நான்கு பேர் காவல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது, கடையின் ஷட்டர் கதவும் சாத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், காலையில் வழக்கம் போல், கடையைத் திறந்து பார்த்தால், கடைக்குள் உள்ள பொருட்கள் சிதறிக் கிடந்தன. தரைதளத்தில் இருந்து, சுமார் 30 கிலோ அளவுள்ள நகைகளையும் காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்து, கடை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல்கள் கொடுத்தனர்.

அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், மோப்பநாய் உதவியுடன் கடையில் தீவி சோதனை நடத்தினர். பின்னர், தரை தளப் பகுதிக்கு சென்று பார்க்கையில், ஒரு ஆள் உள்ளே வரும் அளவிற்கு துளையிட்டு, உள்ளே வந்துள்ளனர். பின், அங்கிருந்த நகைகளை மிக சாவகாசமாக, எவ்விதப் பரபரப்பும் இன்றி, நிதானமாக எடுத்துச் சென்றுள்ளனர். மொத்தம் இரண்டு பேர், பொம்மை மாஸ்க்குகளை அணிந்து கொண்டு, கடைக்குள் புகுந்து விளையாடி உள்ளதை, அங்கிருந்த சிசிடிவியின் காட்சிகள் மூலம் கண்டுபிடுத்துள்ளது தமிழக போலீஸ்.

திருட வந்தவர்கள், வந்த வழியே திரும்பிச் செல்லும் பொழுது, மிளகாய் பொடியினை தரையில் கொட்டிச் சென்றுள்ளனர். அப்படிச் செய்தால், மோப்ப நாயால், தடையத்தினை தொடர்ந்து தேட இயலாது. மேலும், அவர்கள் கையில், நீல நிற கிளவுஸ், குளிருக்கு அணியும் ஜெர்க்கின் உட்பட அடையாளம் காண இயலாதபடி, உடை அணிந்து வந்துள்ளனர்.

இதனால், தமிழக காவல் துறையினர், மிகுந்த குளப்பத்திற்கு ஆளாகி உள்ளனர். கடையில் வேலை செய்யும் ஊழியர்கள், காவல் பணியில் இருப்பவர்கள் என, ஒருவரையும் விடாமல் சோதனை செய்தனர். பின்னர், துருவித் துருவி விசாரணையும் செய்தனர். இவ்வளவு நகைகளை, ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், அவ்வளவு எளிதாக, இருவரால் எடுத்துச் செல்ல இயலாது. கண்டிப்பாக, மற்றவர்கள் உதவியிருக்க வேண்டும் எனவும் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில், வட மாநிலத்தவர்களைச் சேர்ந்த, ஆறு பேர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த விடுதிக்கு அதிரடியாக நுழைந்த போலீசார் அறைக்குள், திடீரென நுழைந்ததால், அந்த வாலிபர்கள் பயந்துவிட்டனர். அங்கிருந்த பைகளை சோதனை செய்து பார்த்த பொழுது, எதுவும் கிடைக்கவில்லை. அங்கு ஐந்து பேர் மட்டுமே இருந்தனர். வெளியில் இருந்து, ஒரு இளைஞன் உள்ளே வரும் வழியில், போலீசாரைக் கண்டதும் மாடியில் இருந்து கீழே குதித்து, தப்ப முயன்றான். இருப்பினும், குதிக்கும் பொழுது, அடிபட்டுவிட்டதால், அவனையும் காவலர்கள் மடக்கிப் பிடித்து, விசாரணை செய்து வருகின்றனர்.

HOT NEWS