ஜெ. தீபா வழக்கு செல்லாது! ஜெயலலிதா படங்களுக்கு அனுமதி அளித்த நீதிமன்றம்!

13 December 2019 சினிமா
jdeepa.jpg

குயின் மற்றும் தலைவி படங்களுக்கு எதிராக, ஜெ.தீபா தொடர்ந்த வழக்கினை, உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

ஏஎல் விஜய் இயக்கத்தில், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. இப்படத்தில், முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்குகின்றனர். அதே போல், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் இணையதள சீரீஸாக குயின் உருவாகி வருகின்றது. இதுவும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெ. தீபா, தன்னிடம் அனுமதி பெறாமல், தன்னுடைய அத்தையின் படத்தினை எவ்வாறு எடுக்க முடியும் என, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கினை விசாரிக்கையில், போதுமான முகாந்திரம் இந்த வழக்கில் இல்லாததால் இந்த வழக்கினை முடித்து வைப்பதாக அறிவித்துள்ளது.

HOT NEWS