அரசியலில் இருந்து விலகுகிறேன்! ஜெ தீபா கடிதம்!

30 July 2019 அரசியல்
ind-vs-sl.jpg pic courtesy:facebook.com/jdeepaofficial

முழு நேர அரசியிலில் இருந்து விலகுவதாக, ஜெ. தீபா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெயலலிதா இறந்த பிறகு, அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா தான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்ப்பட்டது.

இந்நிலையில், அவர் எம்ஜிஆர் அம்மா ஜெ.தீபா பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்தார். அவருடையப் பேரவை, தமிழகமெங்கும் பரவலாகப் பேசப்பட்டது. அதிமுக தலைவர்களும், அவரை மரியாதை கொடுத்துப் பேசினர். இந்நிலையில், இன்று காலை, ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் அரசியலில் இருந்து, விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தன்னுடைய எம்ஜிஆர் அம்மா ஜெ.தீபா பேரவையை அஇஅதிமுகவுடன் இணைத்து விட்டதாகவும், பேரவையைச் சேர்ந்தவர்கள், வேண்டும் என்றால், அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைக் காலையிலேயே ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் எனவும், எனக்கு குழந்தைப் பெற்றுக் கொண்டு, கணவனுடன் வாழத் தான் ஆசை எனவும் குறிப்பிட்டுள்ளார். யாரும் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது எனவும், அதுவே முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

HOT NEWS