டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேட்டில், தேடப்பட்டு வந்த சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக, இதுவரை 30க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் முக்கியக் குற்றவாளிகளாக கருதப்பட்ட ஜெயக்குமார் மற்றும் சித்தாண்டி என்ற இரண்டு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில், சித்தாண்டி என்பவரை, இரண்டு நாட்களுக்கு முன், சிவகங்கைக்கு அருகே உள்ள, அவருடைய சொந்த்த் தோட்டத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தரகர் ஜெயக்குமார் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, மறையும் மையினைக் கொண்ட பேனா, ரொக்கப் பணம், செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றினை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டது.