ஜார்கண்டில் ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸ் கூட்டணி! யார் சிஎம் தெரியுமா?

23 December 2019 அரசியல்
hemandsoron.jpg

கடந்த 30ம் தேதி தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி ஐந்து கட்டங்களாக ஜார்கண்ட் மாநிலத்தில், சட்ட சபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் முக்தி மோட்சா கட்சியானது கூட்டணி வைத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதே போல், ஆளும் கட்சியான பாஜக தனியாகவே இத்தேர்தலை சந்தித்து. தேசிய குடியுரிமை மசோதா திருத்தச் சட்டம் காரணமாக, ஜார்கண்டில் ஆளும்கட்சிக்கு எதிராகப் பிரச்சனை வெடித்தது. இதனிடையே தேர்தலும் நடைபெற்றது.

இன்று காலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் தற்பொழுது வரை, ஆஜம் பாஜக 29 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணியானது 42 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், மற்ற சுயேட்சைகள் 10 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன.

இதனால், மஹாராஷ்டிராவினைத் தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலத்தினையும் பாஜக இழந்துள்ளது. அதிக இடங்களை காங்கிரஸ் கூட்டணியானது பெற்றுள்ளதால், ஜார்கண்ட் மாநிலத்தில் அக்கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், முக்தி மோட்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநிலத்தில் பதவி ஏற்க உள்ளார். அவர் பதவி ஏற்க, காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

HOT NEWS