ஜார்கண்ட் முதல்வராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்! எதிர்கட்சித் தலைவர்கள் குவிந்தனர்!

30 December 2019 அரசியல்
hemantsoran.jpg

ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராக, சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் நேற்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில், இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இதனால், ஜார்கண்ட் மாநிலத்தினை ஆட்சி செய்து வந்த பாஜக, ஆட்சியினை இழந்தது. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான முக்தி மோட்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக முன்மொழியப்பட்டார்.

இதனையடுத்து, ஜார்கண்டில் ஆட்சியமைக்க ஆளுநர் திரௌபதி மர்முவை சந்தித்து உரிமை கோரினார் ஹேமந்த். அவருடையப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் முக ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்மதா பேனர்ஜி உட்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

நேற்று மதியம், பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஆளுநர் திரௌபதி முன்னிலையில் ஹேமந்த் பதவி ஏற்றார். அந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தி, மம்மதா பேனர்ஜி, முக ஸ்டாலின், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, சரத் யாதவ், கனிமொழி, டி.ஆர்.பாலு, அசோக் கெலாட், பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

HOT NEWS